சாத்தான்குளம் அருகே அதிகாலையில் வீடு புகுந்த மர்ம நபர்கள் குடும்பத்தினரைச் சரமாரியாக வெட்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது கணவரும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இரண்டு மகள்களைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (50). இவரது மனைவி மேரி ஜெரினா (39). இந்தத் தம்பதியினருக்கு 15 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலையில் இவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் குடும்பத்தினரைச் சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் மேரி ஜெரினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியலில் நூதன முறையில் திருட்டு? அர்ச்சகர் உட்பட இருவர் கைது!
அவரது கணவர் முத்துகிருஷ்ணன் மற்றும் மகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, முத்துகிருஷ்ணன் மற்றும் மேரி ஜெரினாவின் இரண்டு மகள்களையும் மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Do you like this personality?
இதையும் படிங்க: “வலையில் விழுந்தது... விலையில் விழவில்லையே...” - தசரா திருவிழாவால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!