கடந்த 2022 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோன்று கடந்த மே மாதம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசுப்பள்ளியில் மாணவ, மாணவியர் பருகும் குடிநீர் தொட்டியில், இரவு நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் மலத்தை கலந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மனிதர்கள் தானா? அவர்களுக்கு மனசாட்சி இல்லையா? என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குமுறி வரும் அதேசமயத்தில், தமிழகத்தில் மீண்டும் ஒரு அட்டூழியம் அரங்கேறியிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கோடாங்கி பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வார விடுமுறை காரணமாக பள்ளி முடிந்து வகுப்பறைகள் பூட்டப்பட்டது. இதனை அடுத்து நேற்று அப்பள்ளியின் அருகே விளையாட வந்த சிலர் வகுப்பறை திறந்து இருப்பதை கண்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு சென்ற தலைமையாசிரியர் சரஸ்வதி வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு வகுப்பறை வகுப்பறையினுள் மலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடம் விரைந்து வந்த பல்லடம் போலீசார் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை ஆய்வு செய்தனர். மேலும் வகுப்பறையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்ததும், மலம் கழித்த நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING நெல்லையில் பரபரப்பு... போலீசாரை வெட்ட முயன்றவர் மீது துப்பாக்கிச்சூடு - சிறுவன் வயிற்றில் பாய்ந்த குண்டு...!
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மலம் கிடந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் விசாரணையானது நடைபெற்று வருகிறது. இதனிடையே பல்லடம் பகுதியில் மற்றொரு பள்ளியிலும் இதே போல் மலம் கிடந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அதிகாலையிலேயே காத்திருந்த அதிர்ச்சி.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்...!