தமிழகத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) நடத்தும் ஊர்வலங்கள் அல்லது அணிவகுப்புகளுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு கிளம்புவது ஒரு அரசியல், சித்தாந்தம் சார்ந்த மற்றும் சமூகப் பின்னணியைக் கொண்டுள்ளது. இது குறிப்பாக திராவிட இயக்கங்களான திமுக அவற்றின் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து வலுவாக வெளிப்படுகிறது.
இந்த எதிர்ப்பின் அடிப்படைக் காரணங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் சர்ச்சைகளில் தெரிகின்றன. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் திராவிட இயக்கங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து உருவானவை, இந்து மதத்தின் சில அம்சங்களை விமர்சிப்பது, சாதி ஒழிப்பு, தமிழ் தேசிய உணர்வு ஆகியவற்றை முன்னிறுத்துபவை. இதற்கு மாறாக, ஆர்எஸ்எஸ் ஒரு இந்து தேசியவாத அமைப்பாகக் கருதப்படுகிறது.

இது இந்துத்துவத்தை மையப்படுத்தி, இந்தியாவை இந்து ராஷ்ட்ரமாகக் காணும் சித்தாந்தத்தைப் பின்பற்றுவதாக திராவிடக் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த சித்தாந்த முரண்பாடு தான் எதிர்ப்பின் அடிப்படை. திமுக போன்ற கட்சிகள் ஆர்எஸ்எஸை "சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்பு" என்று விவரிக்கின்றன. ஆர்எஸ்எஸ் ஊர்வலங்கள் மதரீதியான பிளவுகளை அதிகரிக்கும், குறிப்பாக சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் அதிகரிக்க வழிவகுக்கும் என்று கருதுகின்றனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் ஓர் எழுச்சி… அலை கடலென திரளும் திமுக இளைஞரணியினர்… மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உதயநிதி…!
இந்த நிலையில் திருவண்ணாமலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. இது முற்றிலும் தவறானது என தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் விளக்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் திருவண்ணாமலையில் நடந்ததாகப் பரவும் தகவல் பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 அக்டோபர் மாதம் மத்திய பிரதேஷ் மாநிலம், ரத்லம் பகுதியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்தைத் தமிழ்நாட்டில் நடந்ததாகத் தவறாகப் பரப்புகின்றனர் என்றும் தவறான தகவலை பரப்பாதீர்கள் என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா ஒரு இந்து நாடு... ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சால் மீண்டும் வெடித்தது சர்ச்சை...!