2026 தேர்தலில் மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினே முதலமைச்சர் ஆவார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கட்சியின் இளைஞரணியை மேலும் பலமாக்கும் நோக்கில் இத்தகைய மண்டல அளவிலான சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.இந்நிகழ்வு திருவண்ணாமலை கலைஞர் திடலில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 29 கழக மாவட்டங்கள் மற்றும் 91 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிறப்புரையாற்றவுள்ளனர். இந்திய அளவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 5 லட்சம் நிர்வாகிகளைக் கொண்ட ஒரே இளைஞர் அணி நம் கழக இளைஞர் அணி மட்டும என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலையாருக்கு அரோகரா...!! கொட்டும் மழையிலும் குறையாத பக்தி பரவசம்... திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது பரணி தீபம்...!
2026 தேர்தலில் மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினே முதலமைச்சர் ஆவார் என்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடரும் என்பதை உறுதிசெய்யும் வகையில் திருவண்ணாமலையில் எழுச்சியுடன் நடக்கவிருக்கிறது வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார். ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தி. மலை தீபம்... கிரிவலப் பாதையில் வண்டியை இயக்கினால்.... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட காவல்துறை...!