விவசாய நிலங்கள் என்பவை உணவு உற்பத்தியின் அடித்தளமாகவும், கிராமப்புற வாழ்வின் மையமாகவும் திகழ்கின்றன. இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில், விவசாயிகள் தங்கள் பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க மின்வேலி அமைக்கும் பழக்கம் பரவலாக உள்ளது. ஆனால், இந்த மின்வேலிகள் பெரும்பாலும் சட்டவிரோதமாக, முறையான அனுமதியின்றி அமைக்கப்படுகின்றன.
இவை உயர் மின்னழுத்தம் கொண்டவையாக இருப்பதால், அவை வெறும் பயிர் பாதுகாப்பு கருவியாக மட்டும் நின்றுவிடாமல், உயிரிழப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடு, சமூக மோதல்கள் என பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. விவசாய நிலங்களின் எல்லைகளில் அமைக்கப்படும் இந்த மின்வேலிகள், பெரும்பாலும் நேரடி மின்சார இணைப்புடன் இயங்குகின்றன. இவை 11,000 வோல்ட் அளவிலான உயர் மின்னழுத்தத்தைப் பயன்படுத்துவதால், தொடுபவர் உடனடியாக உயிரிழக்க நேரிடுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் , குப்பநத்தம் பகுதியில் நான்கு இளைஞர்கள் முயல் வேட்டைக்கு சென்றுள்ளனர். இதில் 17 மற்றும் 27 வயதான இரண்டு இளைஞர்கள் முயலை வேட்டையாட முயன்ற போது எதிர்பாராத விதமாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் இருவரும் உயிரிழந்ததாக தெரிகிறது. இதை அடுத்து சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த தோட்டத்தின் உரிமையாளர் இரண்டு இளைஞர்களின் சடலங்களையும் வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: அந்தப் பொண்ணோட கழுத்த நெரிச்சாங்க... கோவை சம்பவத்தை நேரில் பார்த்த பெண் பரபரப்பு தகவல்...!
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சடலங்களை மீட்டதுடன் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த பாட்ஷா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரது சடலங்களையும் அருகில் இருந்த நிலத்தின் கிணற்றில் வீசியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் அடுத்தடுத்து நிகழும் குற்றச்சம்பவம்! இளம் பெண் கடத்தல்... தனிப்படை அமைத்துக் போலீஸ் வலைவீச்சு...!