அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞான சேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது; 64 (1) தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. சிறப்பு சலுகைகள் வழங்கப்படாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

11 குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டது., 16 குற்றச்சாட்டுகளும் வாய்மொழி, நேரடி சாட்சி, அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வழங்கப்பட்டது. ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க தீர்ப்பு கொடுத்துள்ளனர். தங்களைப் பொறுத்தவரை குற்றவாளியின் செல்போனை எவிடன்ஸ்காக அனுப்பி இருந்தோம் என கூறினார். குற்றவாளி மேல்முறையீடு செல்ல வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: SIT - னாலும் தமிழ்நாடு போலீஸ் தான்...அரைவேக்காடு இபிஎஸ்! பந்தாடிய அமைச்சர் ரகுபதி

பெண்கள் பயப்படக்கூடாது., துணிந்து வந்து புகார் கொடுக்க வேண்டும்., பாதிக்கப்பட்ட பெண் துணிந்ததால் தான் இன்று குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது. இந்த வழக்கில் இன்னொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக கருதினால் நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க முடியும் என கூறினார்.
இதையும் படிங்க: இது நல்ல உருட்டு மா! ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதில் கனிமொழி மட்டும் விதிவிலக்கா? நக்கலடித்த அதிமுக...