சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறை ஐந்து உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள வியாசர்பாடி ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியை மாதவரம் நோக்கி நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வடசென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்தவுள்ளது.
அதேபோல்சாந்தோம் நெடுஞ்சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பட்டினப்பாக்கத்திலிருந்து லூப் சாலை வழியாக அடையாறு மாலர் மருத்துவமனை அருகே இணையும் உயர்மட்டச் சாலைத் திட்டமும், ராஜீவ் காந்தி சாலை–கிழக்குக் கடற்கரைச் சாலை இணைப்புச் சாலை திட்டமும் பரிந்துரையில் உள்ளன.
இதனிடையே, சென்னையில் இரண்டு முக்கிய பாலங்களை அகலப்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்திருக்கக்கூடிய நிலையில், இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கத் தற்போது நெடுஞ்சாலைத் துறை டெண்டர் கோரியிருக்கிறது.
இதையும் படிங்க: சர்ச்சைகள், விமர்சனங்கள், பேரங்கள், ஊழல்கள்... லிஸ்ட் போட்டு தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக்கூடிய திட்டமாக, கூவம் ஆற்றின் குறுக்கே செல்லக்கூடிய பாலம் ஒன்றையும், பேசின் பாலத்தையும் அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்திருக்கிறது.
குறிப்பாக, இந்த இரண்டு பாலங்களும் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கக்கூடிய பாலங்களாகக் கருதப்படும் நிலையில், அவற்றை அகலப்படுத்துவதற்கு நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்து, அதற்கான டிபிஆர் எனப்படும் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க டெண்டர் கோரியிருக்கிறது.
வியாசர்பாடி ஜிஎன்டி சாலை, அதேபோன்று கிரேடு செப்பரேட்டர் நீட்டிப்பு ஆகியவற்றுக்கும் டிபிஆர் தயாரிக்க டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கூவம் ஆற்றின் வழியே செல்லக்கூடிய இந்தப் பாலம், கோயம்பேடு மற்றும் திருமங்கலத்தை இணைக்கக்கூடிய மிக முக்கியமான பாலமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், அந்தப் பாலத்தை அகலப்படுத்தி, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டிருக்கிறது.
அதேபோன்று, பேசின் பாலத்திலும் அதிக போக்குவரத்து நெரிசல் இருப்பதால், அந்தப் பாலத்தை அகலப்படுத்துவதற்கும் டெண்டர் கோரப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING ரூ.7.54 கோடிக்கு கேக் கொள்முதல்... பள்ளி மாணவர்களுக்கு சி.எம். விஜயின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!