தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் பயனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகின்றது.
ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வது போன்று பேருந்துகளிலும் முன்பதிவு செய்யும் வசதிகள் பயனாளிகள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்று தற்போது பயன்பாட்டில் அதிகளவில் இருந்து வருகின்றன. தனியார் பேருந்துகளில் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகமும் ஆன்லைன் முன்பதிவினை நடைமுறைப்படுத்தி பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

தற்போது பயனாளிகள் அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் போக்குவரத்து துறை பல்வேறு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகளில் பயணிக்க மொபைல் செயலி வாயிலாக முன்பதிவு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: டிஜிட்டல் அந்தரங்கமும் தப்பாது.. வாட்ஸ்அப் மெசேஜைப் பயன்படுத்தி ரூ.200 கோடியை மீட்ட மத்திய அரசு..!
குறிப்பாக 90 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதியும் உள்ள நிலையில், தினமும் சராசரியாக 20000 இருக்கைகள் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படுகின்றன. இந்த நிலையில் கோடை விடுமுறையை ஒட்டி பயனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளை அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகள் சிறப்பு குழுக்கள் முறையில் 75 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பரிசாக 25 பேருக்கு தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகளில் முன்பதிவு வசதி உள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு ஆண்டில் 20 முறை எங்கு வேண்டுமானாலும் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பரிசாக 25 பேர் முன்பதிவு செய்து 10 முறையும், மூன்றாவது பரிசாக 25 பேர் ஐந்து முறை இலவசமாக எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என போக்குவரத்து கழகம் இவ்வாறான சிறப்பான சலுகையை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமித் ஷாவை சந்தித்தது இதற்குத் தான்! கூட்டணி குறித்து மனம் திறந்த இபிஎஸ்.. கொள்கை வேறு.. கூட்டணி வேறு..!