வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தமிழகத்தை ஒட்டி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை மையம் கணித்திருக்கிறது.
நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனக்கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்றைக்கு வெளிவந்திருக்கக்கூடிய அறிக்கையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே மாறாது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் புயலாக மாறுவதற்கான வாய்ப்பும் மிக மிக குறைந்துவிட்டது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு இலங்கை பகுதியில் நிலவி வருகிறது.
அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கடற்பகுதிக்கு நகர்ந்து வந்திருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிக்கு இடையே அடுத்து வரும் 12 மணி நேரத்திற்குள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அதன் பிறகு கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபத்து..! ஆபத்து...!! தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளத்திற்கு போட்டாச்சு பூட்டு... வெளியானது எச்சரிக்கை..!
பொதுவாக புயல் என்றால் கரையை கடக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நகர்கிறது என்பதால் நிலத்தை நோக்கியே நகர்ந்து செல்லும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம், தெற்கு ஆந்திர பகுதிகள் மற்றும் புதுவையை ஒட்டிய பகுதிகளில் கடந்து செல்லுமோ தவிர, அது தமிழகத்திற்கு மேலே உள்ள தெலங்கானாவிற்கு கடந்து செல்ல வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
வடதமிழகம், தெற்கு ஆந்திர பகுதிக்கு இடையிலான நிலப்பகுதியை நோக்கியே காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்து 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதாவது வடதமிழகத்தை கடந்து செல்லும் என்பதால் வடதமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வைப் பொறுத்து வட தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, காவிரி படுகை மாவட்டங்களில் அதிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்... படகுகள் தயார்... உஷார் மக்களே...!