திமுக பொருளாளர் டி ஆர் பாலுவின் மனைவியும் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு இரண்டு மனைவிகள். ஒருவர் ரேணுகா தேவி, மற்றொருவருர் டி. ஆர். பி. பொற்கொடி. டி.ஆர். பாலுவுக்கு 5 பிள்ளைகள் இருக்கும் நிலையில், அதில் டிஆர்பி ராஜாவும் ஒருவர்.
அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் ரேணுகா தேவி நுரையிரல் பாதிப்பு காரணமாக பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 20 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மோசம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ரேணுகா தேவியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கணவனும் மகனும் பொது வாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்தவர் ரேணுகாதேவி என்று முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். தனது அன்பாலும் அரவணைப்பாலும் கணவர் டி ஆர் பாலு மற்றும் மகன் ராஜாவின் வெற்றிக்கு பின்னணியாக இருந்தவர் ரேணுகா தேவி என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அன்பால் அரவணைப்பால் வெற்றிக்கு வித்திட்ட உறுதுணை.. டி.ஆர் பாலுவின் மனைவி உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..!
இந்த நிலையில் மனைவி ரேணுகா தேவியின் பிரிவால் வாடும் டி ஆர் பாலுவை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் பற்றி எரிந்த பேருந்து.. 71 பேர் உடல் கருகி பரிதாப பலி..!!