திமுக பொருளாளர் டி ஆர் பாலுவின் மனைவியும் அமைச்சர் டி ஆர் பி ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி இன்று காலமானார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு இரண்டு மனைவிகள். ஒருவர் ரேணுகா தேவி, மற்றொருவருர் டி. ஆர். பி. பொற்கொடி. டி.ஆர். பாலுவுக்கு 5 பிள்ளைகள் இருக்கும் நிலையில், அதில் டிஆர்பி ராஜாவும் ஒருவர்.
அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் ரேணுகா தேவி நுரையிரல் பாதிப்பு காரணமாக பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 20 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரேணுகா தேவியின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

டி.ஆர் பாலுவின் மனைவியும் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயுமான ரேணுகாதேவி காலமான செய்தியறிந்து வருத்தம் அடைந்ததாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கணவனும் மகனும் பொது வாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்தவர் ரேணுகாதேவி என்று புகழாரம் சூட்டினார். தனது அன்பாலும் அரவணைப்பாலும் கணவர் டி ஆர் பாலு மற்றும் மகன் ராஜாவின் வெற்றிக்கு பின்னணியாக இருந்தவர் ரேணுகா தேவி என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பகல்காம் தாக்குதல் பற்றி விளக்கியே ஆக வேண்டும்! டி.ஆர். பாலு திட்டவட்டம்...
பெருந்துணையாக இருந்த ரேணுகா தேவியின் மறைவு டி ஆர் பாலுவின் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் அவரை இரண்டு வாழும் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். சென்னை டிநகரில் வைக்கப்பட்டுள்ள ரேணுகா தேவியின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். டி ஆர் பாலுவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலை முதலமைச்சர்த் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொழில் கூடமாக உருவெடுத்த தூத்துக்குடி.. வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!