இந்தியாவின் மருத்துவக் கல்வி அமைப்பில் நீட் தேர்வு ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், சமீப காலமாக இந்தத் தேர்வில் ஏற்பட்டுள்ள புகார்கள், கேள்வித்தாள் கசிவு, முறைகேடுகள் ஆகியவை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 2026-ம் ஆண்டு நடைபெற்ற NEET-UG தேர்வில் ஏற்பட்ட கசிவு புகார்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இதில் முக்கியப் பங்கு வகிக்கும் மே 17 இயக்கத்தினரின் வலியுறுத்தல்களும் குறிப்பிடத்தக்கவை.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம், காக்ரோச் ஜனதா பார்ட்டி போன்ற இளைஞர் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. NEET 2026 தேர்வில் கேள்வித்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டது. இந்தச் சூழலில் பல மாணவர்கள் மன அழுத்தம், பொருளாதாரச் சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் பதிவாகின.

இதனால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறையில் முழுமையான சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும், NEET தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மாணவர்கள் தெருக்களில் இறங்கினர். இதைத்தொடர்ந்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையும் படிங்க: பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!
இந்த நிலையில், கண் துடைப்புக்காக கல்வி அமைச்சர் ராஜினாமா செய்திருப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஒருநிமிடம் கூட பேச அனுமதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மாணவர் சமூகத்திற்கு நீட் தேர்வு ஒரு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதுவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். அதுவரை நாடாளுமன்றத்தில் ஜனநாயகரீதியாக எங்களின் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என திமுக எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!