இந்தியாவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்கள், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், தேர்தல் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து வாக்குகளைத் திருடுவதாகவும், இதற்கு 100% ஆதாரங்கள்" தங்களிடம் இருப்பதாகவும் கூறினார். இருப்பினும் எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மாறாக ராகுல் காந்தி ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியது. இந்த நிலையில், வாக்குத் திருட்டு தொடர்பாக அம்பலப்படுத்தும் வகையில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் சண்டையில அவசர சிகிச்சைக்கு போறவங்கள தடுக்கலாமா? செல்வப்பெருந்தகை ஆவேசம்..!
திருநெல்வேலியில் தனது தலைமையில் நடைபெறும் இந்த மாநில மாநாட்டில், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணிதிரண்டு வர வேண்டுமென வலியுறுத்தினார். பீகாரில் நடைபெற்ற வாக்காளர் உரிமைப் பயணம் இந்தியாவில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் தேர்தல் ஆணையத்தை கண்டிக்கின்ற வகையில் நிறைவு பெற்றிருக்கிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: இதுதான் காங்கிரஸ் கட்சி மாண்பா? ஒழுங்கா பிரதமர் கிட்ட மன்னிப்பு கேளுங்க... நயினார் வலியுறுத்தல்