பாஜக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விலகிய நிலையில், டிடிவி தினகரன் போல் தாங்களும் குற்றம் சாட்ட நினைக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மீண்டும் நயினார் நாகேந்திரன் மீதுதான் டிடிவி தினகரன் குற்றம் சுமத்தி உள்ளார். கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமியை நயினார் நாகேந்திரன் தூக்கி பிடித்தது தான் காரணம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக வழி நடத்தவில்லை என்பதை குற்றச்சாட்டு என தெரிவித்தார். நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிச்சாமியை, தூக்கிப்பிடித்தனால்தான் கூட்டணியை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தானாகவே முதல்வர் வேட்பாளர் என கூறிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இபிஎஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷா எங்கேயுமே கூறவில்லை என்றார்.

கூட்டணியிலிருந்து வெளியேறும் பின்னணியில் அண்ணாமலை இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். தன்னை சந்திக்கவே எடப்பாடி பழனிச்சாமி தயங்குவார் எனக் கூறினார். 2021 இல் அதிமுக வெற்றி பெறாமல் இருந்ததற்கு என்ன காரணம் என அனைவருக்கும் தெரியும் எனக் கூறிய டிடிவி தினகரன், பேச தயார் என செய்தியாளர்களிடம் கூற வேண்டிய காரணம் என்ன என்றும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக நான் ஏற்றுக் கொள்வேன் எனக் கூறியது இல்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பத்த வச்சிட்டீயே பரட்டை.... NDA கூட்டணிக்குள் குண்டைப் போட்ட அண்ணாமலை... அமித் ஷாவிற்கு பறந்த ரிப்போர்ட்...!
ஓ பன்னீர்செல்வம் கூட்டணியை விட்டு வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்றும், அதிமுகவோடு இணைந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் எப்படி பணியாற்ற முடியும் என்று கேட்டார்.
இதையும் படிங்க: மீண்டும் பாஜக கூட்டணியில் அமமுக... ஆனா பாஜகவிற்கு டிடிவி தினகரன் போட்ட 3 முக்கிய கன்டிஷன்கள்...!