அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியே தொடர வேண்டும் என்றும் அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது எனவும் அப்போதுதான் திமுகவின் வெற்றி எளிதாகும் என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பேசி இருந்தார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தொடர்வதே தமிழ்நாட்டிற்கு அவர் செய்யக்கூடிய ஒரே நல்ல காரியம் என்றும் அதிமுகவில் கடந்த சில மாதங்களில் 2,3 அணிகள் உருவாகிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி குறித்து இபிஎஸ் பேசியல் உண்மைதான் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்றும் கூறினார். இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் வரை திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இபிஎஸ் தேர்தல் நேரத்தில் அரசியல் செய்வதையே சுட்டிக்காட்டி பேசி இருந்ததாகவும், முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என தங்களது தேர்தல் அறிக்கையில் உள்ளது என்றும் கூறினார். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என டிடிவி தினகரன் விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: “ஆஹா ஒன்னு கூடிட்டாங்கய்யா” - அண்ணாமலைக்கு சப்போர்ட் செய்த நயினார் நாகேந்திரன்... திமுக உ.பி.க்கள் கதறல்...!
இபிஎஸ் க்கு அளித்த விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டு விமர்சித்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார். கூட்டணி குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் மீது தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அம்மா ஆத்மா சும்மா விடாது! வயிற்றெரிச்சல் பிடிச்ச மனுஷங்க... கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்