தமிழக அரசியல் களத்தில் புதிய அலை என்னும் நிலையில் நடிகர் தளபதி விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதிலிருந்து திமுக ஆட்சியையும், அதன் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. விஜய், தனது திரைப்பட வாழ்க்கையிலிருந்து அரசியலுக்கு இடைவிடை செய்தாலும், அவரது பேச்சுகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஸ்டாலின் ஆட்சியின் பல துறைகளை இலக்காகக் கொண்டு தாக்கி வருகிறார்.
இந்த விமர்சனங்கள், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தளத்தில் TVK-ஐ முதன்மை எதிர்க்கட்சியாக உயர்த்தும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன. தமிழக வெற்றி கழகத்தை கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என பல கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டன. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை கூட்டணிக்குள் நுழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அதிமுக முன்னாள் அமைச்சர்களும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தங்கள் கூட்டணிக்குள் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

இருப்பினும் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் அதனை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்றும் கூறிவந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சிவானந்தா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, எந்த ஒரு கட்சியின் தலைவரும் கூறாத வகையில், எஸ் ஐ ஆர் குறித்து தெளிவான விளக்கத்தையும் முன்னெச்சரிக்கையும் விஜய் கொடுத்திருப்பதாக தெரிவித்தார். விஜய் வெறும் வேட்பாளர் மட்டுமல்ல என்றும், 2026ல் முதல்வராகவும் இருப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். தடைகள் இருந்தபோதிலும் நாம் ஒரு நதியைப் போல முன்னேற வேண்டும் என்று எங்கள் தலைவர் கூறினார். மாநில சட்டமன்றத்தில் எஸ்ஐஆருக்கு எதிராக திமுக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.