தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அத்தியாயமாக, தமிழக வெற்றி கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகம் 2024 பிப்ரவரி 2 அன்று நடிகர் விஜயால் நிறுவப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் முதன்மையாக செயல்படும் இந்தக் கட்சி, 2026-ல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்களால் விரும்பப்படும் அடிப்படை அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.
TVK-ன் தோற்றத்திற்கு முன்னோடியாக, விஜய்யின் ரசிகர் அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் 2009 முதல் பொது நலப் பணிகளிலும், உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தது.
இதையும் படிங்க: #BREAKING: NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
2021 உள்ளாட்சித் தேர்தலில் இந்த இயக்கம் 170 தொகுதிகளில் போட்டியிட்டு, 115 இடங்களில் வெற்றி பெற்று, தனது அரசியல் திறனை நிரூபித்தது.TVK-ன் முக்கிய நோக்கம், ஊழல் மற்றும் பிளவுவாத அரசியலுக்கு மாற்றாக, மக்கள் நலன் சார்ந்த, ஒற்றுமையை மையப்படுத்திய அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதாகும்.

இதற்காக, கட்சி தனது கொள்கைகளை மக்களிடையே பரப்புவதற்காக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும், பொதுக் கூட்டங்களையும் திட்டமிட்டு வருகிறது.தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட செயல்முறைதமிழக வெற்றி கழகம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 29A-ன் கீழ், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது.
2024 பிப்ரவரி 2 அன்று, கட்சியின் பொதுச் செயலாளர் திரு. புஸ்ஸி N. ஆனந்த், தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்தால் பரிசீலிக்கப்பட்டு, மாநில அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் தமிழக வெற்றிக்கழகமும் இடம்பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பானை வெளியிட்டுள்ளது. பனையூர் கிழக்கு கடற்கரை சாலை முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனிக்கட்சி... தவெகவுடன் கூட்டணி... ஓபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்!