தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு மற்றொரு முக்கிய விரிவாக்கத்தைப் பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளின் பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்நிகழ்வு தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது முதல் முறையாக இந்த இரு கட்சிகளும் அரசில் அதிகாரப்பூர்வ பங்கேற்பைப் பெற்றுள்ளன. இந்த நிகழ்வை தவெக பெருமையுடன் கூறியுள்ளது.
முதல்வர் விஜய் சொன்னதைச் செய்துகாட்டுபவர் என்று தெரிவித்துள்ளது. ஒரே கட்சி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருக்கும் நிலையை மாற்றி, மக்களுக்கான ஜனநாயக ஆட்சியில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று அதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார் என்றும் தேர்தலுக்கு முன்பாகவே, தங்களை நாடி வரும் மற்றும் தங்களுடன் கை கைகோர்க்க நினைக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு தகுந்த மரியாதையையும், அதிகாரத்தில் சம பங்கையும் உறுதி அளித்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

அதிகாரம் ஒரு இடத்தில் குவியாமல், தரைமட்ட தொண்டன் வரை, கூட்டணிக் கட்சிகள் வரை பரவலாக்கப்பட வேண்டும் என்றும் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் தலைவரின் பாணி என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம். மாநாட்டு மேடையில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதியை, தனது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் அவர் பிரதிபலித்து வருகிறார் எனவும் பெருமிதம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: LIMITS என்னனு தெரிஞ்சி நடந்துக்கோங்க.. எப்பவும் மீறக்கூடாது..!! தவெகவினருக்கு என்.ஆனந்த் வார்னிங்..!!
"ஆட்சியில் பங்கு" என்பது வெறும் வார்த்தை ஜாலம் என்று நினைத்தவர்களுக்கு மத்தியில், "சொன்னதைச் செய்வார், செய்வதையே சொல்வார்" என்பதற்கு இணங்க, முதல்வர் விஜய் விக்கிரவாண்டியில் விதைத்த கொள்கை விதையை இப்போது செயலாக மாற்றி வருகிறார். இது தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பாதையை மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகரமான நகர்வாகும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் வீட்டு தென்னை கூனி எதிர்வீட்டுக்கு இளநீர் தந்தால் பெயர் என்ன..? ஆ.ராசா வார்த்தைப் போர்..!