சைதாப்பேட்டை தொகுதியின் தமிழக வெற்றி கழக வேட்பாளர் பிரகாசம் மீது பாட்டில் வீச்சு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். அருள் பிரகாசம் ஆவார்.
தவெகவின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் அவர், கட்சியின் முதல் பெரிய தேர்தல் அனுபவத்தில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கியுள்ளார். 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை மார்ச் 29, 2026 அன்று தவெக தலைவர் தளபதி விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டபோது, சென்னைப் பகுதியின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான சைதாப்பேட்டைக்கு அருள் பிரகாசம் பெயர் அறிவிக்கப்பட்டது.

சைதாப்பேட்டை தொகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பாரம்பரியமாக தீவிரப் போட்டியைச் சந்திக்கும் இடமாக அறியப்படுகிறது. 2021 தேர்தலில் திமுகவின் மா. சுப்பிரமணியன் இங்கு வெற்றி பெற்றிருந்தார். தற்போது 2026 தேர்தலில் தவெக தனித்து நின்று போட்டியிடும் நிலையில், அருள் பிரகாசம் தனது கட்சியின் வெற்றிச் சின்னமான விசிலில் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்.
இதையும் படிங்க: திருச்சியில் பரப்புரை...! சென்னையிலிருந்து புறப்பட்ட விஜய்..!!
இந்த நிலையில் சைதாப்பேட்டை தொகுதியின் தமிழக வெற்றி கழக வேட்பாளர் பிரகாசம் மீது பாட்டில் வீச்சு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் நிகழ்ந்துள்ள தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: உயிர் உள்ளவரை இயக்கத்திற்காக பாடுபடுவேன்..! பரப்புரையில் செங்கோட்டையன் சூளுரை..!