தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றார். தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்துவிட்டது. இந்த நிலையில் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய தமிழக வெற்றிக் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி நியமனம்..! யார் இந்த ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்..?
பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: "போதைப்பொருள்" தடுப்பு படை..! அரசாணை வெளியீடு..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் விஜய்..!