தமிழக வெற்றிக் கழகம் இன்று கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது. அதில் திமுக அரசின் ஊழல் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலில் ஊறி நாறிப்போன திமுகவே ஒவ்வொரு கல்யாண வீட்டிலும் ஒப்பாரி வைப்பது போல் நடிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்று கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரு துறையையும் விடாமல் ஒவ்வொரு துறையிலும் ஊழல் ஆட்டம் போட்டுவிட்ட நிலையில் உத்தமர் வேடம் போடுவது நியாயமா என்றும் வினவியுள்ளது. அவதூறு, ஆபாசம், வன்மம், வக்கிரத்தன்மை ஆகியவற்றை சுதந்திரமாக ஓடவிடும் திமுகவை இப்போது ஊழல் வழக்குகளுக்காக சட்டமும் நீதியும் துரத்துகின்றன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தம வேடம் போடும் ஊழல் சக்தியான திமுக, தூய சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தை தாறுமாறாகப் பேசினால் மக்கள் அவர்கள் மீது பன்னீர் தெளிப்பார்கள் என்று நினைத்தீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக மக்களை ஏமாற்றி வந்த இந்த அரசியல் அணுகுமுறை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. என் உயிர் நண்பனின் பிள்ளை என் பிள்ளை போல என்ற தொனியில் பேசிய துப்பில்லாத ஸ்டாலின் இனி என்ன சப்பைக்கட்டு கட்டுவார் என்று மக்களே கேட்கத் தொடங்கிவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி தேவையில்லை: அமைச்சர் விஸ்வநாதன் திட்டவட்டம்!
பொதுமக்கள் மத்தியில் இந்த விமர்சனம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஹீரோ என்று நக்கலாகப் பேசிய திமுகவே இப்போது உணர வேண்டும். ஊழலுக்கு எதிரான உண்மையான துப்பாக்கி போன்ற ஹீரோதான் எங்கள் வெற்றித் தலைவர் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்தியுள்ளது. கரப்ஷன் முன்னேற்றக் கழகம் என்று திமுகவை விமர்சித்துள்ள இந்த அறிக்கை, தற்போதைய அரசியல் சூழலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம்!! சட்டம் ஒழுங்கு என்பது Sample-க்கு கூட இல்லை! உதயநிதி ஸ்டாலின் காட்டம்!