தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி (நாளை மறுதினம்) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. மாநிலம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் இந்த முக்கிய பணி நடைபெற உள்ள நிலையில், அமைதியான மற்றும் நேர்மையான செயல்முறையை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
குறிப்பாக, மொத்தம் ஒரு லட்சம் போலீசார் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்தத் தேர்தலில் சுமார் 5.73 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பங்கேற்றுள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்து மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்த அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல்முறையாக இந்த தேர்தலை சந்திக்கிறார்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விஜய் மாற்றத்திற்கான முகமாக இருப்பார் என்று பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் சொல்லி வருகின்றனர். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார் என்றும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: Tvk ஜெயிக்கணும்-னு ஆசை..! நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓபன் டாக்..!!
இந்த நிலையில், தமிழக முதல்வராக கண்டிப்பாக விஜய் பதவி ஏற்பார் என தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேளாங்கண்ணி பேராலயத்தில் பிரார்த்தனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழக வெற்றி கழகத்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை நெருங்கியாச்சு..! கூடுதல் பாதுகாப்பு கொடுங்க..! ஆதவ் வலியுறுத்தல்..!!