தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 21ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே 25-ம் தேதி மாநாடு நடைபெறும் என அறிவித்த நிலையில், விநாயகர் சதுர்த்தி நெருங்கியதால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் எனக்கு ஒரு காவல்துறை 21ஆம் தேதியே மாநாட்டை வைத்துக்கொள்ள அறிவுறுத்தியது. அதன் பேரில் வரும் 21ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரையில் நடைபெறும் மாநாடு தொடர்பாக 42 கேள்விகளை காவல்துறை தமிழக வெற்றி கழகத்திலும் எழுப்பியிருந்தது. இதற்கு கட்சியின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு பாஸ் வழங்கப் போவதில்லை என்று கூறியுள்ளது.
விஜய் நடந்த சென்று தொண்டர்களை பார்ப்பதற்கு 800 அடி தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தெற்கு திசை பார்த்து அமைக்கப்பட்டிருக்கும் மேடை 200 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்டது எனக்கு கூறப்பட்டுள்ளது. மாநாடு மாலை 3:15 முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #2026 ELECTION: ADMK கூட கூட்டணி? அதிரடி முடிவை அறிவித்த தவெக தலைவர் விஜய்..!

இந்த மாநாட்டில் ஆண்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரும் பெண்கள் 25 ஆயிரம் பேரும் பங்கே இருப்பார்கள் என்று கூறியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் மற்றும் 400 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படுவதாக கூறியுள்ளது. மாநாட்டிலிருந்து உள்ளேயும் வெளியேறவும் செல்வதற்காக 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் மதுரை மாநாட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
அவசர உதவிக்காக மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதி சுகாதாரத் துறை இடம் மனு அளிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறி உள்ளது. இதைப்போல காவல்துறை எழுப்பிய 42 கேள்விகளுக்கு தமிழக வெற்றி கழகம் பதில் அளித்துள்ளது.
இதையும் படிங்க: ஆக.21 தான் மாநாடு..! தமிழக வெற்றிக் கழகம் எடுத்த முக்கிய முடிவு.. காரணம் தெரியுமா?