காவிரிப் பிரச்சினையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவின் அணுகுமுறையைக் கடுமையாக தமிழக வெற்றிக் கழகம் விமர்சித்துள்ளது. விவசாயிகளின் நலன்களையும் கர்நாடகாவில் வாழும் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளையும் முன்னிறுத்திச் செயல்படுவதே மனசாட்சி உள்ள மக்களாட்சி என்று தவெக தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜய் போல சுயநலத்தோடு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிக்கும் தலைவர் அல்ல என்பதையும் அது வலியுறுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்றபோதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது ஒருநாளாவது உதறியிருக்குமா திமுக என்று கேள்வி எழுப்பியுள்ளது. அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா என்றும் அது கேட்டிருக்கிறது.

அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கமாகவே திமுக இருந்ததாக தவெக குற்றம் சாட்டியுள்ளது.ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவது போல சவுண்ட் கொடுத்துவிட்டு மியூட் மோடுக்குச் சென்று மியாவ் என்றுகூட சத்தம் எழுப்பாத காரியப் பூனையாகவே திமுக செயல்பட்டதாக தவெக சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் ஆட்சி பறிபோன பிறகு மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: எகிறும் கரண்ட்பில்... 4 மடங்கு உயர்வு..! 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக..! சீமான் வலியுறுத்தல்..!
எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டிருப்பதாகவும், கடந்த மே மாதத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக காவிரி விவகாரத்தில் கபட நாடகம் ஆடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் தவெக தெரிவித்துள்ளது.எனவே காவிரிப் பிரச்சினையில் திரு. ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சி போய்விட்டதே, தவெக ஆட்சி வந்துவிட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும் என்று தவெக வலியுறுத்தியுள்ளது. அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா என்றால் அவரது உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும் என்றும், இது அவர் மட்டுமன்று உலகமே அறிந்த உண்மை என்றும் தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: வறட்சியை எப்படி தாங்க முடியும்.? காவிரி நீர் விவகாரம்... குரல் எழுப்பிய சீமான்..!!