2026 சட்டமன்றத் தேர்தலை முன்னோட்டமாக கொண்டு தமிழக வெற்றி கழகம் களமாடி வருகிறது. பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், மக்கள் சந்திப்பு என பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு தங்கள் கட்சி மற்றும் கொள்கைகளை மக்களிடம் சேர்க்கும் வேலைகளை பார்த்து வருகிறது. கரூர் சம்பவம் சற்று சருக்கலை கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து தமிழக வெற்றிக்கழகம் மற்றும் கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக அரசியல் களம் கண்டு வருகின்றனர்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், பொருளாளர் வெங்கடரமணன், வழக்கறிஞர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், சட்ட ஆலோசனை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் குமரேசன், சட்ட ஆலோசனை பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் சிவ சண்முகம், பாண்டியன், வெலிங்டன், தன்ராஜ், விஜயகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நான் கிங் மேக்கரா? போராடி ஜெயிப்பேன்! கரூர் முதல் ஜனநாயகன் வரை விஜய் Open Talk!
மேலும், வழக்கறிஞர் பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் இந்திரா தன்ராஜ், சக்கரவர்த்தி, செல்வ பாரதி, சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் ரேவந்த் சரண், தேசிய செய்தி தொடர்பாளர் சத்திய குமார் உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து, லெனின், சங்கரநாராயணன், ராஜரத்தினம், உதயகுமார், சுரேஷ்பாபு, அன்பரசன், அஜித் குமார், மகேந்திரன், இளமாறன், முத்துக்குமரன், வெற்றிச்செல்வன் உட்பட 34 பேர் கொண்ட குழுவை தமிழக வெற்றிக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அறைக்குள் அமர்ந்து அரசியல்..! என்னத்த சொல்ல? விஜயை விளாசிய செல்லூர் ராஜூ..!