த.வெ.க, 2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி. ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். இந்த உற்சாகம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் கரூர் மாவட்டத்தின் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை நடத்தினார்.

விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 உயிர்கள் அனாமத்தாக பறிபோனது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டை உலுக்கியது. தமிழக வெற்றி கழகத்தை இந்த நிகழ்வு முடக்கிய நிலையில் தற்போது மீண்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: “நிர்மலா சீதாராமன் முதல்வர், இபிஎஸ், விஜய் துணை முதல்வர்” - அமித் ஷாவின் அதிரடி கணக்கு - முக்கிய அரசியல் புள்ளி தகவல்...!
இளைஞர்கள், மகளிரை கவரும் வகையில் ஐந்து வகையான சின்னங்களை தமிழக வெற்றி கழகம் தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நவம்பர் ஆறாம் தேதி தமிழக வெற்றி கழகம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெகவை ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது… எங்க கூட்டணிக்கு வாங்க… ஆர்.பி. உதயகுமார் அழைப்பு…!