செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, மகளை காதலித்த இளைஞரை நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் தந்தை உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தையூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் பிரவீண், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தையும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான ஏழுமலை, அவரது மகன் கௌதம் உள்ளிட்டோர் பிரவீனைதொடர்ந்து எச்சரித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஐந்து பேர் கொண்ட கும்பல் காரில் அரிவாள்களை மறைத்து கொண்டு வந்து, ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருந்த நடுரோட்டில் பிரவீணை சுற்றி வளைத்து, தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பெற்றோர்களே உஷார்...!! - தமிழகத்தில் விரைவில் வருகிறது புதிய சட்டம்... அமைச்சர் வன்னியர அதிரடி..!
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரவீண், மூன்று நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், இளைஞரை வெட்டிக் கொலை செய்ததாக பெண்ணின் தந்தை ஏழுமலை, அவரது மகன் கௌதம் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் விடிய விடிய வேட்டை... கல்லூரி மாணவர்கள் அறையில் சிக்கிய பயங்கர பொருட்கள்... திகைத்துப்போன போலீஸ்...!