தமிழக முதலமைச்சர் விஜய் அரசு மருத்துவமனைகளில் தடையற்ற மருத்துவச் சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை காலத்தில் மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தொடர்புடைய அதிகாரிகளுக்கு விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.மழைக்காலத்தில் மின்சாரத் தடை ஏற்பட்டாலும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பணிகள் தொடர வேண்டும் என்பதற்காக தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ஜெனரேட்டர்கள் உயரமான இடங்களில் வைக்கப்பட்டு, தேவையான அளவு டீசல் கையிருப்பில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு போதுமான அளவில் கையிருப்பில் வைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட மழைக்கால சுகாதார நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தும்படி முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.பருவமழை காலத்தில் நீர் தேக்கம், வெள்ளம் போன்ற சூழல்களில் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் வாய்ப்பு அதிகம். அத்தகைய சூழலில் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே இந்த உத்தரவின் நோக்கம்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து இடங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாம்புக் கடிக்கான மருந்துகள் உள்ளிட்ட அவசரகால மருந்துகளும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தப்புமா? தத்தளிக்குமா சென்னை?... வடகிழக்கு பருவமழை தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!
முதலமைச்சர் விஜய் இந்த நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சுகாதார அமைப்பு செயல்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள், சுவாசக் கோளாறுகள் போன்றவற்றை எதிர்கொள்ள மருத்துவமனைகள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவைகள் தடையின்றி இயங்க வேண்டும் என்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: முதல்வர் தொகுதி நிதி..! பாதாள சாக்கடை தூய்மைக்காக நவீன இயந்திரங்கள்..! CM போட்ட அதிரடி உத்தரவு..!!