மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த நிர்வாகி மணிமாறன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு கார்களில் வந்த மர்மகும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி உடைய சம்பவம் பெரு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாமக நிர்வாகி தேவமணி கொலை வழக்கின் முதல் குற்றவாளியான மணிமாறன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் தேவமணி ஆதரவாளர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகி மணிமாறன். இவர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமன கூட்டத்தில் பங்கேற்று விட்டு மீண்டும் காரைக்காலுக்கு தனது காரில் சென்றுள்ளார். செம்பனார் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, இரு கார்களில் வந்த கும்பல் மணிமாறனின் காரை வழிமறித்துள்ளனர். பிறகு, அங்குள்ள தனியார் பள்ளி முன்பு மணிமாறனை ஓட ஓட விரட்டி தலையை சிதைத்து படுகொலை செய்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

தொடர்ந்து அங்கிருந்து மர்மகும்பல் தப்பி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் உடலைக் கைப்பற்றி, கொடைக்கான காரணம் குறித்தும் கொலை செய்த கும்பல் யார் என்பது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகி மணிமாறன் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவர் இருந்துள்ளார். எனவே இந்த கொலைக்கு படித்துப்பழியாக மணிமாறன் கொல்லப்பட்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். தமிழக வாழ்வுரிமை பற்றி நிர்வாகி தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கடத்தப்பட்ட 13 வயது சிறுவன் கொலை.. முட்புதரில் கிடந்த சடலம்.. நடந்தது என்ன..?