எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவா? வேண்டாமா? சிங்கப்பெண் படை இருந்தும் 8 வயது குழந்தைக்கு பாதுகாப்பில்லையா என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4ஆம் வகுப்பு 8 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை உலுக்குகிறது.
இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார். குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது அரசின் பரிசல்ல. அடிப்படை உரிமை. ஆனால், கடந்த சில மாதங்களில் கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலை, திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் உயிரிழப்பு, சென்னை பூந்தமல்லியில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை, திருச்சியில் 14 வயது சிறுமி தொடர்பான வழக்கில் 9 பேர் கைது என அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்ந்து வெளிவந்து இருப்பதாக தெரிவித்தார்.

இப்போது தேன்கனிக்கோட்டை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இங்கும் ரோந்து மேற்கொள்கிறது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சிறப்புப்படை, கண்காணிப்பு, காவல்துறை, போக்சோ சட்டம், இத்தனைப் பாதுகாப்பு அமைப்புகள் இருந்தும் ஒரு 8 வயது குழந்தை குற்றவாளியின் கைகளில் சிக்கியது எப்படி? சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு எங்கே? பள்ளி மாணவர்கள் செல்லும் பாதையில் ரோந்து எங்கே?
இதையும் படிங்க: அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!
குற்றத்தை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கை எங்கே? என்று சரமாரி கேள்விகளை முன் வைத்தார். குற்றவாளியைப் பிடிப்பது அவசியம் என்றும் ஆனால் குழந்தை பாதிக்கப்பட்ட பிறகு விழித்தெழுவது பாதுகாப்பு அல்ல. அந்தக் கொடுமை நிகழாமல் காப்பதே ஆட்சியின் கடமை எனவும் தெரிவித்துள்ள வேல்முருகன், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவா வேண்டாமா இந்த கேள்வி தமிழகத்தில் எழும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
கடந்த 100 நாட்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான முக்கிய குற்ற வழக்குகளின் கைது, குற்றப்பத்திரிகை, விசாரணை, தண்டனை, நிலுவை ஆகிய விவரங்களை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்றும் சிங்கப்பெண் என்ற பெயர் மட்டும் போதாது., ஒரு குழந்தை அச்சமின்றி பள்ளிக்குச் சென்று உயிரும் கண்ணியமும் காக்கப்பட்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் அதுவே அந்த படையை வெற்றி எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!