தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தி பகுதியில் இன்று நடைபெறுகிறது. இதற்கு முன்னர், மாநாட்டு ஏற்பாடுகளின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, கட்சியின் தலைவர் விஜய் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கவிருந்தார்.
ஆனால், மாநாட்டு திடலில் இந்தக் கொடிக்கம்பத்தை நிறுவும் பணியின்போது, அது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து, அருகில் நின்றிருந்த ஒரு காரை சேதப்படுத்திய சம்பவம் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியது. மதுரையில், தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி பகுதியில் சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டிருந்தது.

வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற கொள்கை முழக்கத்துடன், இந்த மாநாடு மிகப் பிரமாண்டமாக நடைபெறுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள், 8000 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாய்கள், பெண்களுக்காக “பிங்க் ரூம்” வசதிகள், ஆறு பார்க்கிங் இடங்கள் என பல்வேறு ஏற்பாடுகள் தவெக நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: இதை மிஸ் பண்ணிட்டீங்களே விஜய்... காலையிலேயே பரபரப்பு... கையில் காலி பாட்டிலுடன் தவிக்கும் தொண்டர்கள்...!
இந்த நிலையில், நேற்று மாநாட்டு திடலின் நுழைவு வாயிலில் 100 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவுவதற்கு ஒரு ராட்சத கிரேன் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கொடிக்கம்பம் சுமார் 10 டன் எடை கொண்டதாக இருந்தது. ஆனால், இதை நிறுவும் பணியின்போது, கிரேனில் கட்டப்பட்டிருந்த பெல்ட் அறுந்ததாகவும், நட் மற்றும் போல்டுகள் சரியாகப் பொருத்தப்படாததாலும் கொடிக்கம்பம் கீழே சாய்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 40 அடி கொடிக்கம்பம் பாதுகாப்போடு நடப்பட்டது. இன்று நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் இந்த 40 அடி கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: காலையிலேயே கட்டிங்.. காற்றில் பறந்த விஜய் கட்டளை... தவெக மாநாட்டு திடலிலேயே போதையேற்றிய இளைஞர்கள்...!