கரூர் கோரச் சம்பவம் மனதில் நீங்காத வடுவாக மாறியது. வரலாற்றுப் பெரும் கொடுமையாக உருவெடுத்துள்ளது. விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்ததும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கரூருக்கு விரைந்தனர். கரூரின் நிலைமை குறித்து கேட்டு அறிந்ததுடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் கூறினர். மீண்டும் இதுபோல ஒரு சம்பவம் நிகழாது இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனிடையே பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, நிர்மலா சீதாராமன் உட்பட ஏராளமானோர் கரூர் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 34 மணி நேரத்திற்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்... எங்கே செல்கிறார்?
கரூர் சம்பவம் நிகழ்ந்தவுடன் சென்னைக்கு விரைந்த விஜய் வீட்டிலேயே முடங்கி இருந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயுடன் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியின் வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் கோர சம்பவத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டதுடன் நிலைமை குறித்தும் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரூர் கோரச் சம்பவம்... அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள்... இனிமே இவர் தான் விசாரிக்க போறாராம்...!