திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தொடர்பான சர்ச்சைகள் தமிழக அரசியல் களத்தில் கடந்த சில ஆண்டுகளாக பெரும் பேசுபொருளாக இருந்து வருகின்றன. இவரது ஆவேசமான மேடைப் பேச்சுகள், சென்னை வட்டார மொழியில் உணர்ச்சி பொங்க பேசும் பாணி, மற்றும் அரசியல் எதிரிகள் மீதான கடுமையான விமர்சனங்கள் ஆகியவை இவரை அடிக்கடி சர்ச்சைகளின் மையப்புள்ளியாக மாற்றியுள்ளன. இவரது பேச்சுகள் பலமுறை சமூக வலைதளங்களில் வைரலாகி, எதிர்க் கட்சிகளிடமிருந்து கடும் கண்டனங்களையும், சட்ட நடவடிக்கைகளையும் தூண்டியுள்ளன.
இதனிடையில், மதுரையில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் விதி உரையாற்றினார். அப்போது, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தவறு செய்தால், அதை அறிந்து செய்தால், அது கபட நாடகம். அது மு.க. ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும் விடமாட்டோம், என்று கூறி, முதலமைச்சரை அங்கிள் என்று குறிப்பிட்டார். மேலும், ஸ்டாலின் அங்கிள், இட்ஸ் வெரி ராங் அங்கிள் என்று பேசியபோது, அரசின் நிர்வாகத்தை கேள்விக்குள்ளாக்கி, ஊழல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார்.

முதலமைச்சரை அங்கிள் என கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், திமுக பேச்சாளராக உள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விஜயை மச்சான் எனக் கூறி விமர்சித்தார். வயதில் மூத்த முதலமைச்சர் ஸ்டாலின் உங்களுக்கு மாமா என்றால்., நானும் மூத்தவன் தான் எனக்கு மச்சான் என கூறினார். மச்சான்.,மச்சான்… உங்க அப்பன் கிட்ட போய் கேளு திமுகனா என்ன., கலைஞர் நான் யார்னு., கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என விஜய் கூறுவதாகவும், அரசியல் எதிரி மாறலாம் ஆனால் கொள்கை எதிரி மாற மாட்டார்கள் தானே., அப்போது பாஜகவை தானே அவர் விமர்சிக்க வேண்டும் என கேட்டார்.
இதையும் படிங்க: NDA கூட்டணி ஒரு துரோக கொத்தடிமை கூட்டணி! திமுக கடும் குற்றச்சாட்டு..!
முந்தா நேத்து பிகில் அடிச்சுட்டு, நேத்து கட்சி ஆரம்பிச்சுட்டு, அங்கிள் னு சொல்லுறதா என கேட்டார். ஜனநாயகம் படம் வெளியான பிறகு 2026-ல் தேர்தல் வரும்., தேர்தல் முடிவுகள் வெளியாகி தோற்று விட்டால் மீண்டும் நடிக்கவே சென்று விடுவார்., நீங்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான் எனக் கூறினார்.
இதையும் படிங்க: WHAT BRO… அடக்கி வாசிங்க BRO…. மதுரை முழுவதும் விஜயை கண்டித்து போஸ்டர்கள்!