இன்று சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் மிக முக்கியமான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது மக்கள் சந்திப்பு என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், காவல்துறையின் அனுமதியின்படி 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால், கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடல் அல்லது KVP கார்டன் என்ற இடத்தில் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஜயின் இந்த பிரச்சார நிகழ்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

2024 ல் தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டிருந்தாலும் 2026 சட்டமன்றத் தேர்தலை தான் முதல் முதலாக சந்திக்கிறது. விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தலை நோக்கி தமிழக வெற்றிக்கழகம் உற்சாகத்துடன் களமாடி வருகிறது. கட்சிப் பணிகள், மாநாடுகள், மக்கள் சந்திப்பு என பல்வேறு கட்ட முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. இதில் மிகவும் முக்கியமானது வேட்பாளர் தேர்வு. வேட்பாளர்கள் விருப்ப மனுக்களை மிகவும் ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர்.
இதையும் படிங்க: விறுவிறு தேர்தல் களம்..! அருண் ராஜ் தலைமையில் TVK தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம்..!
விஜய் விரைவில் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலத்தில் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரச்சார நிகழ்ச்சியை நடத்துகிறார். இதற்காக சேலத்திற்கு விஜய் வருகை தந்தார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலத்திற்கு விஜய் சென்றடைந்தார். அங்கிருந்து கார் மூலமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விஜய் புறப்பட்டார். வழிநெடுகிலும் விஜய்க்கு தொண்டர்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் செல்லும் காரை தொண்டர்கள் நெருங்க விடாமல் தடுப்பது காவல்துறைக்கு சவாலான பணியாக மாறிவிட்டது. சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் விஜயின் கார் மீது பூமழை பொழிந்தனர்.
இதையும் படிங்க: திக்கு திக்குன்னு இருக்கோ? முதல்வர் அறிவிப்புக்கு விசில் சத்தம் தான் காரணம்... விஜய் விமர்சனம்..!