தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணையை நேரடியாக கண்காணிக்க வேண்டும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும், சிபிஐ விசாரிக்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளுடன் தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தவெகவின் 3 கோரிக்கைகளையும் ஏற்று யாருமே எதிர்பார்க்காத தீர்ப்பை வெளியிட்டது.
இதனையடுத்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதற்கு முன்னதாக போன் செய்த விஜய் தீர்ப்பு விவரங்கள் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் என்ன பேசப்போகிறேன் என்பது குறித்து ஆதவ் சொன்ன தகவல்களை உள்வாங்கிக்கொண்ட விஜய், காவல்துறை, திமுக மீதான கடுமையான விமர்சனங்களுக்கு ஓ.கே. சொல்லியுள்ளார்.
அதுமட்டுமின்றி தமிழக அரசியலில் தவெக அடுத்து யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற கேள்வி பரபரப்பாக உள்ளதால், தவெக தனித்து தான் போட்டியிடும் என்பதையும் மறைமுகமாக தெரிவிக்கும் படி அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே ஆதவ் அர்ஜுனாவும் செய்தியாளர் சந்திப்பில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் காவல்துறை சரியான பாதுகாப்பு தரவில்லை, வேண்டுமென்றே குறுகலான இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தார்கள், திமுகவின் சதிச்செயல் என்றெல்லாம் ஆவேசமாக பேசினார்.
இதையும் படிங்க: வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.5000... ஆயுள் காப்பீடு... இன்று முதல் கரூரில் களமிறங்கும் தவெக...!
குறிப்பாக பெரம்பலூர் எஸ்.பி விஜய்க்கு கூடுன கூட்டத்தை பார்த்து வேற சில காரணங்களுக்காக பெரம்பலூருக்கு வர வேண்டாம் என்று சொன்னதாகவும், கரூர் மாவட்ட போலீஸ் தடபுடலாக மாவட்ட எல்லையிலிருந்து விஜயை வரவேற்றதோடு, பாதுகாப்பில் கோட்டை விட்டுவிட்டதாகவும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அப்படியே விஜய் முதலமைச்சர் ஆனதும் கரூர் முழுதாக மாற்றப்படும், கரூர் தனி நபர்கள் பிடியிலிருந்து மீட்கப்படும் என்றும் தெரிவித்தார். அதாவது விஜய் தனித்து தான் போட்டியிடப்போகிறார். அவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்தினார். இது அதிமுகவிற்கான தவெகவின் பதிலடி என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அதிமுகவைப் பொறுத்தவரை ஆட்சியில் பங்கு தர தயாராக இல்லை, அதுவும் முதலமைச்சர் நாற்காலி இபிஎஸுக்கு தவிர வேற யாருக்கும் கிடையாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. அப்படியிருக்கையில் விஜய் தான் முதலமைச்சர் என ஆதவ் அடித்துக்கூறியிருப்பதில் இருந்தே, அதிமுக, தவெக கூட்டணி வொர்க் அவுட் ஆகாது என்பது உறுதியாகிவிட்டது.
அதேபோல் டெல்லிக்கு டேரக்ட்டா போன் போட்டு சொல்ல வேண்டிய மெசெஜை விஜய் ஆத்வ் அர்ஜுனா மூலமாக நேரடியாக தெரிவித்திருக்கிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தீர்ப்பு வெளியான 6 மணி நேரத்திற்கு பிறகு... தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பரபர பதிவு...!