கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது.

கரூர் கூட்ட நெரிசலில் குடும்பங்களை மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். விஜய் கரூருக்கு செல்ல இருந்த நிலையில் அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்து உள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் பேசிய விஜய் அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், மன்னிப்பு கேட்டார்.
இதையும் படிங்க: விஜயை அரெஸ்ட் பண்ணாததுக்கு காரணமே இதுதான்! ஆதவ் எப்படி தப்பிச்சாரு? சீமான் பரபரப்பு பேட்டி...!
திருமணம், கல்விச் செலவு என அனைத்து செலவுகளையும் விஜய் இருக்கிறேன் என கூறியதாக தகவல் வெளியானது. அனைவரது கோரிக்கைகளையும் அவை எழுத்துப்பூர்வமாக பெற்றுக்கொண்டார் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கியதாக கூறப்பட்டு உள்ளது. விஜய் வழங்கிய ரூ.5 லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு ஆவணங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: நெல்மணிகளை காக்க தவறிய திமுக... நீங்க வீட்டுக்கு போறது உறுதி... தவெக தலைவர் விஜய் கண்டனம்...!