தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல்களை நோக்கி அரசியல் களமிறங்கிய விஜய், த.வெ.க. என்ற பெயரில் தனது கட்சியைப் பதிவு செய்து, பரப்புரைப் பயணங்களைத் தொடங்கினார். செப்டம்பர் 13 அன்று தொடங்கிய இந்தப் பயணம், சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கான பயணம் செப்டம்பர் 27 அன்று தொடங்கியது.
கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பொது மேடை நிகழ்ச்சி, விஜய்யின் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் ஆர்வத்தால் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது.விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் உற்சாக சுற்றுப் பயணம் அனைவரையும் சோக கடலில் ஆழ்த்தியது.

கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சென்று சந்திக்காத நிலையில் அவர் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. விஜய் கரூர் செல்ல உள்ளதால் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டது. இதனிடையே, கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்ல உள்ள நிலையில் வாகன ஏற்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அவசரத்தின் பின்னால் அருவருப்பான அரசியல்... உண்மை வெளிவரும்... சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு நயினார் வரவேற்பு...!
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், தேவையான ஏற்பாடுகளை அவர்கள் மேற்கொள்ள உள்ளனர். 41 குடும்பங்களையும் தனித்தனியாக சந்திக்காமல் திருமணம் மண்டபம் போன்ற இடத்தில் சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பரபரப்பை கிளப்பும் கரூர் துயரச் சம்பவம்.. SIT-ஐ எதிர்க்கும் தவெக.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!!