தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பயணம் இப்போது மிகவும் தீவிரமடைந்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் இந்தக் கட்சி, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. விஜய் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி, கட்சியின் அடிப்படை கொள்கையாக நேர்மை, சமூக நீதி, மக்கள் நலன் ஆகியவற்றை வலியுறுத்தி வருகிறார்.
கட்சி தொடங்கியதிலிருந்தே விஜய், தனது ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி, அடித்தள அமைப்பை வலுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வந்தார். இப்போது தேர்தல் நெருங்கி வருவதால், பிரசாரம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வேட்பாளர் தேர்வு என அனைத்து பணிகளும் வேகமெடுத்துள்ளன. கட்சியின் சின்னமாக விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
வேட்பாளர் தேர்வு செயல்முறைதான் தற்போது கட்சியின் மிக முக்கியமான பணியாக இருக்கிறது. வேட்பாளர்களை விஜய் தானே நேரடியாக நேர்காணல் செய்து தேர்ந்தெடுப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கான விருப்ப மனு படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மூலம் ஆரம்ப வடிகட்டல் நடைபெறும்.
இதையும் படிங்க: எத வச்சு ஊழல்னு சொல்லுறாரு? ஊழல் தடுப்பு சட்டம்னா என்ன தெரியுமா? EPS- ஐ வெளுத்து வாங்கிய அருண்ராஜ்..!

பின்னர் பெறப்பட்ட மனுக்களின் பட்டியலை தலைமை அலுவலகக் குழு தயார் செய்து விஜயிடம் சமர்ப்பிக்கும். அதன் பிறகு, தொகுதி வாரியாக விஜய் தனிப்பட்ட முறையில் நேர்காணல் நடத்தி, வேட்பாளர்களை இறுதி செய்வார். இதனிடையே, வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் தவெக தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் தேர்வு தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் ZOOM Meeting வாயிலாக விஜய் ஆலோசிக்க உள்ளதாக கூறினார். சட்டப்பேரவை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறப்படும் நிலையில் ஆலோசனை நடக்க உள்ளது. விருப்ப மனு பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இணையதளமே முடங்கி உள்ளது எனவும் கூறினார்.
இதையும் படிங்க: அட விடுங்கப்பா.! விஜயை எந்த நாட்டுக்கு முதல்வர் ஆக்கப் போறாரு செங்கோட்டையன்? செல்லூர் ராஜு கேள்வி..!