தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரை நிகழ்த்தினார். அப்போது, பரந்தூர் மக்கள் தொடர்பாகவும், அவர்களைப் பிரச்சினைகள் குறித்தும் பேசினார். பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தங்கள் கடிதம் எழுதி இருந்ததாகவும், அந்த கடிதத்தில் பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்து புது விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் மற்ற விவசாயிகள் வருட கணக்கில் போராடி வருகிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்ததாகவும் தெரிவித்தார். பரந்தூர் மக்களை தான் சென்று பார்த்து வந்த அடுத்த நாளே மக்களை பாதிக்காத வண்ணம் விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், ஆயிரத்து ஐந்து குடும்பங்கள் மட்டும்தான் பறந்திருப்பகுதியில் இருப்பதால் அந்த இடத்தை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது திமுக அரசு என்று குறிப்பிட்டார்.

மக்களை பாதிக்காத வண்ணம் என்றால் என்ன சார்? ஒன்னு அந்த இடத்தில் ஏர்போர்ட் வருதுன்னு சொல்லணும்,. இல்ல அந்த இடத்தில் விமான நிலையம் வராதுன்னு சொல்லணும் ரெண்டுமே அந்த அறிக்கையில் இல்ல. வெறும் 1,005 குடும்பங்கள் என்றால் அவ்வளவு சாதாரணமா போச்சா CM சார்? அந்த மக்களும் நம்ப மக்கள்தானே? ஏன் அந்த மனிதாபிமானம் கூட இல்லை? எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும்தான் மக்கள் மீது அக்கறை இருக்குமா ? நீர்நிலைகளை, வீடுகளை, வாழ்வாதாரங்களை அழித்து விட்டு அந்த இடத்தில்தான் ஏர்போர்ட் கட்டியே ஆக வேண்டும் என்ற அவசியம் என்ன உள்ளது? என்ன பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
இதையும் படிங்க: #BREAKING: 2026 தேர்தலில் விஜய் தான் "முதலமைச்சர் வேட்பாளர்"... தவெக செயற்குழுக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இப்படி இருக்கும் போது எப்படி சார் மக்களின் முதல்வர் என்று நா கூசாமல் சொல்றீங்க…பரந்தூர் நிலைய பிரச்சனைக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லாத மாதிரி காட்டுகிறீர்கள்., விமான போக்குவரத்து துறை அமைச்சரே, அந்த இடத்தை பரிந்துரை செய்தது நீங்கள் தான் என கூறியதாகவும், அதற்கும் உங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்று தெரிவித்தார். விவசாய நிலங்களை கையகப்படுத்த உங்கள் அரசு தான் அரசாணை பிறப்பித்தது. இதெல்லாம் உங்களுக்கு தெரிந்தால் நடக்கிறதா., உங்கள் ஒப்புதலோடு தான் நடக்கிறதா என்று தெரியவில்லை., சாதி மதம் கடந்து ஒன்றாக இணைந்து போராடிக் கொண்டிருக்கிற பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து பேசுங்கள் என்று கூறினார்.

உங்கள் அமைச்சர்களும் அதிகாரிகளும் சென்று பேசக்கூடாது., நீங்களே நேரில் சென்று சந்தித்து பேச வேண்டும்., அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாக்கத்தை நீங்கள் கொடுக்க வேண்டும்., இதையெல்லாம் செய்யாமல் எல்லாவற்றையும் கடந்து போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால், பரந்தூர் பகுதி விவசாய மக்களை, பொதுமக்களையும் நானே கூப்பிட்டு வந்து தலைமைச் செயலகத்தில் உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமையை உண்டாகும் என எச்சரித்தார். அதையும் மீறி என்ன வந்தாலும் நான் எதிர்கொள்ள தயார் என்றும் கூறினார். மேலும், We are not against any development ! we are not against airport ! அந்த லொகேஷன் தான் தப்பு என கூறுகிறோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: #2026ELECTION: விஜய் தலைமையில் தவெக செயற்குழு கூட்டம் தொடக்கம்... கூட்டணி தொடர்பான அது முக்கிய ஆலோசனை!