மதுரை மக்கள் பாசத்தை திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு காமியுங்கள், கோபத்தை எடப்பாடியிடம் காமியுங்கள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அலங்காநல்லூரில் பேசினார். மதுரை சோழவந்தான் தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அலங்காநல்லூர் கேட்டுகடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பொதுமக்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களிடம் பேசியதாவது, மதுரை வந்தாலே உற்சாகம் தான் அன்பு பாசத்தை காட்டக் கூடிய மக்கள் இந்த மதுரை மக்கள் என்றும் உங்கள் பாசச்தை திமுக வேட்பாளர் வெங்கடேசனிடம் காட்டுங்கள், பகையை எடப்பாடிக்கு காட்டுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மதுரை மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், மதுரையில் திருப்பரங்குன்றத்தை வைத்து பாஜக பெரிய பிரச்சனை செய்ய நினைத்தது மதுரை மக்கள் அதனை அனுமதிக்கவில்லை என்றார். இந்த தொகுதியில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிகட்டு போட்டி நடைபெறும் பகுதி எனவும் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என கூறினார்.
இதையும் படிங்க: காலில் விழுந்தது தப்பு இல்ல… காலை வாரிவிட்டது தான் தப்பு..! எடப்பாடியை விமர்சித்த உதயநிதி..!!!
எடப்பாடி பழனிச்சாமி டெல்லி முரட்டு அடிமை என்றும் கூறினார். மத்திய பாஜக அரசை தமிழகத்திலிருந்து விரட்ட வேண்டும், தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது, பாசத்தை நமது வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு காட்டி வாக்களியுங்கள், கோபத்தை எடப்பாடிக்கு காமியுங்கள் என்றும் கூறினார்.
தொடர்ந்து, கூட்டத்தில் கூடியிருந்தவர்களில் ஒருவர் குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி உதயநிதியை நோக்கி குரல் ஒலிப்பினர். இதனை கன்ட உதயநிதி குழந்தைக்கு "கயல்விழி " என பெயர் வைத்தார்.
இதையும் படிங்க: உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் MLA..! அண்ணாமலை விமர்சனம்..!