பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் நினைவுகூரப்படும் நாள். ஜனநாயகத்தின் பெருவெளிச்சமாகத் திகழ்ந்த அண்ணாவின் நினைவுகளைப் போற்றியபடி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார். அண்ணாவின் வாழ்வும் கொள்கையும் இன்றும் தமிழக அரசியலை வழிநடத்தும் ஒளியாக இருப்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற முழக்கத்துடன் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியவர் அண்ணா. தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையம் அமைத்த அந்தத் தலைவரின் பங்களிப்புகளை உதயநிதி ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். அண்ணா தான் தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டி, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் அளித்து, இருமொழிக் கொள்கையை உறுதிசெய்தார்.

இந்தச் செயல்கள் தமிழகத்தின் அடையாளத்தை நிலைநிறுத்தியவை. அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்வது அண்ணாவின் கொள்கைகளே என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் மாநில சுயாட்சிக்காகவும் அண்ணா குரல் கொடுத்தார்.
இதையும் படிங்க: VOLTAGE பிரச்சனை... FUSE போன தவெக அரசு... வெளுத்துவிட்ட உதயநிதி..!!
அந்தக் குரல் இன்றும் நம்மை வழிநடத்துகிறது என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார். அண்ணாவின் வாழ்க்கை சாமானிய மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. அதிகாரம் ஆதிக்கவாதிகளிடமிருந்து சாதாரண மக்களிடம் சென்றடைந்தது. அவரது கடமை உணர்வு, கண்ணியமான அணுகுமுறை, கட்டுப்பாடான செயல்பாடு ஆகியவை இன்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றன.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் வந்தாச்சு..! பரபரக்கும் அரசியல் களம்..! ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி அனல் பிரச்சாரம்..!!