நாகை மாவட்டத்தில் த.வெ.க. நிர்வாகி பூபாலன் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் கைதானது வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரிய அளவிலான பிடிப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு த.வெ.க.வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பூபாலன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையிலும், கட்சிப் பொறுப்பில் உள்ள மற்றொரு நிர்வாகி அந்த போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கிய நபருக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கி, ஊடகவியலாளர்களை மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இது கட்சியா அல்லது போதைப்பொருள் கடத்தல் கூடாரமா என்ற கேள்வியை எழுப்பும் அளவுக்கு த.வெ.க.வின் போதைப்பொருள் வலையமைப்பு அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: முதல்வன் சொன்னாலே ஸ்டாலின் தான் ஞாபகம் வருதோ.? CHEAP CM..! விளாசிய உதயநிதி.!!
தற்போதைய ஆட்சியில் கட்சிக்குள் இருக்கும் போதைப்பொருள் தனாதிகாரிகளும் கார்டெல் மாஃபியாக்களும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள் என்று சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ரீல்ஸ் எடுப்பதிலேயே காலத்தை வீணடிக்காமல் யதார்த்தத்திற்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: விளம்பர மோகத்தில் ஆளும் அரசு; தண்ணீரின்றித் தவிக்கும் கடைமடை விவசாயிகள்! உதயநிதி விளாசல்..!!