எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கோவையில் திறக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளார். நம் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கோவையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்கப்படுவதில் மகிழ்ச்சி கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்த மாபெரும் அறிவுச்சுரங்கத்தை கோவை வாழ் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.அதேநேரம், வழக்கமாக கழக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர்கள் இந்த முறை பெரியார் அறிவுலகத்தில் ‘நான் முதல்வன்’ என்ற பெயரின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து இருக்கிறார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார்.

இந்த மலிவான முதலமைச்சரின் ஸ்டிக்கர் ஆட்சியில் நான் முதல்வன் திட்டத்தைச் சிதைத்ததோடு மட்டுமின்றி அதன் பெயரைக்கூட ஏற்க மனமில்லை என்றால் என்ன காரணம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.‘முதல்வன்’ என்று சொன்னாலே கழகத்தலைவர் அவர்கள் பெயர் தான் நினைவுக்கு வருகிறதா அல்லது நம் மாணவர்கள் அவரவர் துறையில் முதல்வர்கள் ஆவது பிடிக்கவில்லையா என்று அவர் வினா எழுப்பினார்.
இதையும் படிங்க: விளம்பர மோகத்தில் ஆளும் அரசு; தண்ணீரின்றித் தவிக்கும் கடைமடை விவசாயிகள்! உதயநிதி விளாசல்..!!
கழக அரசு சூட்டிய பெயர்களை மறைப்பது, திட்டங்களை ரத்து செய்வது, ரத்து செய்தவற்றையே மீண்டும் ரத்து செய்து யூ-டர்ன் அடிப்பது என்று சர்க்கஸ் நடத்தாமல் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை இந்த பொம்மை முதலமைச்சர் நடத்த வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள இந்த அறிவுலகம் இன்று முதலமைச்சர் விஜய்யால் திறக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அரசியல் விமர்சனங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!