தமிழ்நாட்டின் தலைநிமிர்விற்கும் சமூகநீதிப் பாதுகாப்புக்கும் அடித்தளமிட்ட தன்னிகரில்லாத் தலைவரும் முத்தமிழறிஞருமான கலைஞர் மு. கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் உருவப் படத்திற்கும் அவரது நினைவிடத்திற்கும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர், அருகிலேயே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கும் சென்று உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏ-க்கள் மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகளைச் சட்டங்களாக்கி, சரித்திர சாதனைகளால் தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய தன்னிகரில்லாத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சென்று மரியாதை செலுத்தினோம். அப்போது, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினோம். என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்! எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு மெரினா நினைவிடம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மேகதாது விவகாரம்... வேகம் காட்டும் கர்நாடகா..! என்ன செய்யப் போறீங்க..? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி..!!