நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு 2025 திட்டத்தை சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது விழா மேடையில் பேருரை ஆற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், யார் கூறுவதையும் அப்படியே நம்பாமல் பகுத்தாய்வு செய்து உணர வேண்டும் என்று பெரியார் கூறியதை கடைப்பிடிப்பவர்கள் இன்றைய மாணவர்கள் என பேசினார். 2K கிட்ஸ்களுக்கு அட்வைஸ் செய்தால் பிடிக்காது என தனக்கு தெரியும் என கூறினார்.

கல்லூரி கனவு திட்டம் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 11, 12 ஆம் வகுப்புகளைப் போல கல்லூரிக் கல்வியும் மிக முக்கியம்., இது பயத்தை உண்டாக்க கூறும் வார்த்தைகள் அல்ல., உண்மை என தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என பெருமிதம் தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டங்களால் மாணவ, மாணவிகள் பெருமளவில் பயன் பெறுகின்றனர் என கூறினார்.
இதையும் படிங்க: பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி.. பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு..!

பள்ளிக்கல்வி முடித்தவர்களுக்கு அழகான எதிர்காலத்தை கொடுப்பதுதான் கல்லூரிகனவு திட்டம் என்றும் கல்வி மட்டுமே வாழ்க்கையை மாற்றும் சக்தி என்பதை உணர்ந்து அனைவரும் நன்கு பயில வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: EPS நடவடிக்கையால் தான் நீதி கிடைத்துள்ளது.. பொள்ளாச்சி வழக்கு குறித்து அதிமுக கருத்து..!