பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு தொடர்பாக அதிமுக கருத்து தெரிவித்துள்ளது. அதில், நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட்ட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி கிடைத்துள்ளது. பொள்ளாச்சி வழக்கில் ஒன்பது பேருக்கும் சாபம் வரை ஆயுதங்களை விதிக்கப்பட்டது வரவேற்கிறோம். திமுகவைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளி தெளிக்கும் அர்ப்ப புத்தி எங்களுக்கு இல்லை. பொள்ளாச்சி வழக்கை அன்று முதல்வராக இருந்த இபிஎஸ் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டதால் தற்போது உரிய தீர்ப்பு வந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் யாரை காப்பாற்ற எஃப் ஐ ஆர் லீக் செய்தது ஸ்டாலின் மாடல் அரசு. எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினோம். பொள்ளாச்சி வழக்கில் சுயவிபரம் வெளியானதாக கூறும் திமுக, அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் விவரம் வெளியிட்டது யார் என்று கூற முடியுமா? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் எந்த சாரை காப்பாற்றத் துடிக்கிறது திமுக அரசு…
இதையும் படிங்க: சிக்ஸர்களாக விளாசும் எடப்பாடியார்..! ஒரே வரியில் அவுட் ஆக்கிய ஜெ-வின் உதவியாளர்..!

திமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும். உரிய நீதி கிடைக்கும் நாள் அன்று திமுக தலை குனிந்து நிற்கும், இது உறுதி..என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 71 வயதினிலே... எடப்பாடி முன்பிருக்கும் 5 அரசியல் சவால்கள்...!