தமிழ்நாடு விளையாட்டு நாடு 2.0 என்பது தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இது தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையில் முன்னணி மாநிலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, கிராமப்புறங்களில் இருந்து உலகளாவிய அரங்குகள் வரை விளையாட்டு வீரர்களை உருவாக்கும் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இதன் மைய அமைப்பாக செயல்படுகிறது.
இத்திட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளில் விளையாட்டு உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி, புதிய விளையாட்டு அகாடமிகளை உருவாக்கி, திறமையான வீரர்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. குறிப்பாக, கலைஞர் விளையாட்டுக் கருவி திட்டம் போன்ற துணைத் திட்டங்கள் மூலம் கிராமப்புறங்களில் உள்ள 12,600 கிராம பஞ்சாயத்துகளுக்கு இலவச விளையாட்டுக் கருவிகள் வழங்கப்பட்டு, ஊரகப் பகுதிகளில் இருந்து சாம்பியன்களை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ரூ.86 கோடி மதிப்பிலான கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 கருத்தரங்கை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளையும் சென்னையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளதாக தெரிவித்தார். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குட் நியூஸ்... ரூ.65 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்...!
சர்வதேச அளவிலான போட்டிகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சாதனை படைத்து வருவதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டில் அரசு பணி வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: அவரு எங்க இளந்தலைவர் யா... உதயநிதி தலைமையேற்றால் என்ன தவறு? அமைச்சர் ரகுபதி பிரஸ் மீட்...!