கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாடு அரசால் 2023 செப்டம்பர் 15 ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று, காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பெயரிடப்பட்டு, பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்யும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டது. மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை பெறுவதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

புதிதாக விண்ணப்பித்த தேர்வானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்தார். புதிதாக விண்ணப்பித்த மகளிருக்கு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் உரிமை தொகை வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். மகளிர் உரிமைத் தொகையாக இதுவரை 30,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றும் மகளிர் உரிமைத் தொகை திட்ட நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்தியதால் புதிதாக பல மகளிர் உரிமை தொகை பெற தகுதி ஆகி உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: SIR ஐ பயன்படுத்தி பாஜகவுக்கு எதிரான வாக்குகளை நீக்க முயற்சி... ஓபனாக பேசிய துணை முதல்வர்...!
இதனிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியானவர்களின் இறுதிப்பட்டியல் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வெளியாகும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கான அரசாக உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். அடுத்த மாதம் முதல் விடுபட்ட பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றும் விடுபட்டோருக்கும் விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பஹ்ரைனில் நடந்த கபடி போட்டியில் தங்க பதக்கங்கள்... நமக்கெல்லாம் பெருமை... துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்...!