மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல், மருத்துவப் படிப்புகளான MBBS, BDS, மற்றும் பிற தொடர்புடைய படிப்புகளுக்கு மாணவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்காக உருவாக்கப்படுகிறது. நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு தரவரிசை வழங்கப்படுகிறது. இது கலந்தாய்வு செயல்முறையை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
தரவரிசைப் பட்டியலைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண்கள், பிரிவு, மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. கலந்தாய்வு செயல்முறையை நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்த, தரவரிசைப் பட்டியல் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு தெளிவான அளவுகோலை வழங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள இட ஒதுக்கீட்டு விதிகளின்படி (SC, ST, OBC, EWS, மற்றும் 7.5% அரசு பள்ளி மாணவர் இட ஒதுக்கீடு), மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட உதவுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஒரு 30-ஆம் தேதி தொடங்கும் நிலையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். எம்பிபிஎஸ், பி டி எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்காக 72,743 மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: ஆட்சி, அதிகாரத்தில் புதிய மைல்கல்.. இந்திராகாந்தியை முந்தினார் பிரதமர் மோடி!!
கடந்த ஆண்டை விட கூடுதலாக 29,680 மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறினார். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 4,062 மாணவர்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மருத்துவ கவுன்சிலிங்கிற்கு போலி ஆவணங்கள் அளித்த 25 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறினார்.
இதையும் படிங்க: உங்களை சந்தித்தாலே பெரிய பாக்கியம்.. பிரதமருக்கு ஓ.பி.எஸ் பரபரப்பு கடிதம்.. விஷயம் இதுதானோ..!!