திமுகவோடு இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்களின் உரிமைகளுக்கு எதிராக நிற்பதாக சக பட்டியலின அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. அந்த வகையில் புரட்சி தமிழகம் கட்சியின் தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தி சமீப காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திருமாவளவனை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆபாசமாக திருமாவளவனை விமர்சித்ததாக கூறி ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் டிஜிபி அலுவலகம் முன்பாக விசிக தொண்டர்களால் ஏர்போர்ட் மூர்த்தி தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன் குறித்த ஆபாசமாக விமர்சித்ததால் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருமா பற்றி அவதூறாக பேசுவாயா? எனக் கூறி நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான புரட்சித் தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியதுடன் செருப்புகளை கழற்றி அவர் மீது வீசியும் உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்திய நபர்கள் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் தப்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலை வெறித்தாக்குதல்! போலீஸ் இதை விரும்புதா? சீமான் ஆவேசம்
இது குறித்து ஏர்போர்ட் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் விசிகவினர் ஐந்து பேர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விசிகவினரை ஏர்போர்ட் மூர்த்தி தாக்கியதாக திலீபன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் மூர்த்தி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏர்போர்ட் மூர்த்தி தன்னை தற்காத்துக் கொள்ளவே எதிர் தாக்குதல் நடத்த இருப்பதாகவும், இருப்பினும் அவர் மீது எதற்கு வழக்கு பதிவு செய்கிறார்கள் என்ற கேள்வியையும் பல்வேறு தரப்பினர் முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமா பத்தியே பேசுவியா? ஏர்போர்ட் மூர்த்தியை செருப்பால் அடித்த விசிகவினர் !